முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க புதிய கட்டுப்பாடு
முதலமைச்சர் தனிப்பிரிவில் பொதுமக்கள் நேரடியாக வந்து மனு அளிப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
முதலமைச்சரின் தனிப்பிரிவில் தினமும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொது மக்கள் மனு அளிக்கின்றனர். அது தவிர முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்தும் மனுக்களை அளிக்கின்றனர்.
தற்போது கொரோனா பெறுந்தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இதனால் பொதுமக்கள் மனுக்களை நேரிடையாக அளிப்பதை தவிர்த்து தளர்வுகள் அறிவிக்கும் வரை தலைமை செயலக வாயிலில் இதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மட்டுமே மனுக்களை சேர்க்க அறிவுறத்தப்படுகிறது.
மிகவும் அத்தியாவசிய சூழ்நிலையில் மட்டுமே முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்படும்.
கொரோனா தொற்று வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் முதலமைச்சர் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதை தவிர்த்து தபால்/இணையவழி சேவைகளை பயன்படுத்தி மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்