Breaking News

இந்தியாவுக்கு எதிராக போலி செய்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் முடக்கம்...மத்திய அரசு அதிரடி..!

அட்மின் மீடியா
0

இந்தியாவிற்கு எதிரான கருத்துகள், பொய்யான தகவல்களைப் பரப்பும், நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படும் இணைய தளங்கள், யூ டியூப் சேனல்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்தியாவுக்கு எதிராக போலி செய்தி பரப்பிய 35 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடங்கியுள்ளது.


 

இதுகுறித்து மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக இணை செயலாளர் விக்ரம் சஹாய் கூறுகையில், 

35 யூடியூப் சேனல்கள், 2 டுவிட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இணையதள பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்ததால் முடக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback