Breaking News

பூஸ்டர் டோஸ் என்றால் என்ன? முழு விவரம்....

அட்மின் மீடியா
0

தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளின் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.


பூஸ்டர் டோஸ் என்றால் என்ன?

கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் இன்னும் கூடுதலான நோய் எதிர்ப்பு சக்தியை பெறும் வகையில் மூன்றாவதாக செலுத்தப்படும் தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஆகும் அதாவது 

பூஸ்டர் டோஸ் என்பது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டால், அந்த நோய் கிருமிக்கு எதிராக போரிட தடுப்பு மருந்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் .சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தவணைகளில் அதாவது ஒன்றுக்கும் மேலான டோஸ் தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ள வேண்டியிருக்கும். கொரோனா தடுப்பு மருந்தின் முழு (இரண்டு) டோஸ்கள் மூலம் கிடைத்த நோய் எதிர்ப்பு ஆற்றல் காலப்போக்கில் குறையும் பொழுது, மேலும் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் அதிகரிப்பதற்காக பூஸ்டர் தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.இதன் மூலம் உடலில் நீண்ட காலம் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகிறது. 


அதேபோல் தமிழகத்தில் இனி வாரத்திற்கு ஒரு முறை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.அதன்படி இனி வாரந்தோறும் வியாழக்கிழமை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback