Breaking News

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

இன்று தென் தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதைப்போல,தஞ்சை,திருவாரூர்,அரியலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.சென்னையில் இன்றும்,நாளையும் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 

02.01.2022 நாளை டெல்டா மாவட்டங்கள் ,கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 

03.01.2022 நாளை மறுநாள் தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

04.01.2022  தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 


 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback