Breaking News

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை

அட்மின் மீடியா
0

அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாள் வீட்டு தனிமை கட்டாயம் என மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.

 


தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு பல நாடுகளில் பரவி வருகிறது.  இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கி உள்ளது.

இதன்படி, அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் என மத்தியஅரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள் படி பயணத்தைத் தொடங்கும் முன்னரே ஆன்லைனில் ஒருவர் தங்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த பிசிஆர் சோதனை விமானம் கிளம்ப 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 

இந்த சான்றிதழ் பொய்யாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். 

கொரோனா நெக்டிவ் சான்றிதழை அளிக்கும் பயணிகளை மட்டும் விமானத்தில் ஏற விமான நிறுவனங்கள் அனுமதிக்கும். 

அனைத்து பயணிகளும் ஆரோக்கிய சேது செயலியை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பயணத்தின் போது அனைத்து பயணிகளும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். 

பயணத்தின் போது யாருக்காவது கொரோனா அறிகுறிகள் இருந்தால், தகுந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றித் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆபத்தான நாடுகள்ஆபத்தான நாடுகள்ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருந்து வரும் அனைத்து பயணிகளிடமும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அவர்கள் கொரோனா நெகட்டிவ் என்றால் 7 நாட்கள் இடைவெளியில் 15 நாட்களில் 2 முறை கொரோனா சோதனை செய்ய வேண்டும். பாசிட்டிவ் என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

 மேலும் விவரங்களுக்கு:-

https://www.mohfw.gov.in/pdf/RevisedGuidelinesforInternationalArrivalsdated7thJanuary2022.pdf



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback