Breaking News

10, 12ம் வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்..

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 


கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக நடப்புக் கல்வியாண்டிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமோ என்ற கேள்வி எழுந்து வருகிறது.ஆனால் இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். 

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் கலைஞர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் 

15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதால், நடப்புக் கல்வியாண்டிக் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 175 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback