Breaking News

புத்தாண்டில் வழிபாட்டுக்கு தடையில்லை !! அமைச்சர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இந்நிலையில்

 


அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இன்று செய்தியாளர்களிடம்...

காலம் காலமாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு எந்தெந்த கோவில்களில் வழிபாடுகள் நடைபெறுமோ அங்கெல்லாம் வழிபாடுகள் நடத்த தடையில்லை. பக்தர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம். தி.மு.க. அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல.அதேநேரம் தற்போதைய பெருந்தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டு கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். இடைவெளியை கடைபிடித்து வழிபாடு செய்ய செல்ல வேண்டும்.சாமி தரிசனம் செய்யலாம். என தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Share this