Breaking News

அமீரகத்தில் இனி வாரத்திற்கு நாலரை நாட்கள் மட்டுமே வேலை அபுதாபி மற்றும் துபாய் ஆட்சியாளர்கள் அதிரடி அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனி மற்றும் ஞாயிறு வரை வார இறுதி நாட்களாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

திங்கள் முதல் வெள்ளி மதியம் வரை நான்கரை நாட்கள் வேலை நாட்களாக கருதப்படும் 

இந்த புதிய நடைமுறை ஜனவரி 1 முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது


 

 
அபுதாபி மற்றும் துபாயில்அரசு ஊழியர்கள் திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை வரை பணிபுரிவார்கள் எனவும் வெள்ளி மதியம் துவங்கி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை இவர்களுக்கு விடுமுறை விடப்படும் என அபுதாபி மற்றும் துபாய் ஊடக அலுவலகங்கள் தெரிவித்துள்ளன அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30மணி முதல் மதியம் 3.30 மணி வரையும் வெள்ளிக்கிழமை அன்று காலை 7.30 – மதியம் 12 வரையும் மட்டுமே அலுவலகங்கள் இருக்கும், வெள்ளிக்கிழமை மதியம் துவங்கி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வரை வார விடுமுறை விடப்படும் என அமீரக அரசு இன்று அறிவித்திருக்கிறது.




Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback