புதுக்கோட்டை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி.. தவறுதலாக சிறுவன் மீது பாய்ந்த குண்டு
அட்மின் மீடியா
0
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் துப்பாக்கி பயிற்சி மையம் உள்ளது. இன்று வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியின்போது வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு, தவறுதலாக 11 வயது சிறுவன் தலையில் பட்டுள்ளது
இதில் படுகாயமடைந்த சிறுவன் புகழேந்தியை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட தடை விதிப்பதாக புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்