Breaking News

முப்படை தளபதிகளின் குழு தலைவராக எம்.எம். நரவானே நியமனம்

அட்மின் மீடியா
0

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த நிலையில், தற்போது நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத். குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயனம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உட்பட 14 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத்தின் திடீர் மரணத்தையடுத்து, முப்படை தலைமை தளபதி தேர்வு செய்யப்படும் வரை எம்.எம். நரவானே குழு தலைவராக செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதிதான் Chairman of the Chiefs of Staff Committee-ன் தலைவராகவும் இருந்து வந்தார். இக்குழுவின் பணிகளில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காக ராணுவ தளபதி நரவனேவுக்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Share this