Breaking News

சமூகவலைதளங்களில் உங்கள் அனுமதியின்றி பரவும் புகைப்படம், வீடியோவை நீக்குவது எப்படி....

அட்மின் மீடியா
0

கூகுள், ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் உங்கள் அனுமதியின்றி பரவும் புகைப்படம், வீடியோவை  நீக்க மெட்டா அறிமுகம் செய்த புதிய தளம் தான் StopNCII.org 


சமூகவலைதளங்களில் பெண்களின் புகைபடங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவது, நெருக்கமாக பழகி அவர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைபடங்கல் வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவது, மற்றும மிரட்டுவது போன்ற செயலை தடுக்க பேஸ்புக் நிறுவனம் மெட்டா அறிமுகபடுத்தியுள்ள புதிய வசதி வரப்பிரசாதம் ஆகும்...


சிறப்பம்சம்:-

இந்த தளத்தின் நோக்கம் பெண்களின் படங்கள் வைரலாவதையும், எந்த அனுமதியும் இல்லாமல் பகிரப்படுவதைத் தடுப்பதாகும். 

இந்த தளம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் புகார் செய்யக்கூடிய பல அம்சங்களை வழங்குகிறது. 

புகாரின் அடிப்படையில் ஒரு புகைப்படம் பதிவேற்றப்பட்டவுடன், பேஸ்புக்கின் தானியங்கி கருவிகள் அதை ஸ்கேன் செய்யும்" என தெரிவித்துள்ளார்.

இந்த StopNCII.org தொழில்நுட்பம் UK Revenge Porn Helpline என்ற அமைப்பு உடன் இணைந்து மெட்டாவால் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெண் பயனர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் ஆபாச படங்கள் போன்ற அச்சுறுத்தல் பெற்றால், பாதிக்கப்பட்டவர்கள் அந்த புகைப்படங்களை புகார் செய்து தடுக்கமுடியும்.

பெண்கள் தங்களின் அந்தரங்கம், தவறாக சித்தரிக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பகிரப்பட்டு விட்டன அல்லது பகிரப்படலாம் என கவலைப்படுபவர்கள் StopNCII.org தளத்தில் புகார் சமர்ப்பிக்கலாம்.

 ஒரு புகைப்படம் பதிவேற்றப்பட்டவுடன், பேஸ்புக்கின் தானியங்கி முறையில்  அதை ஸ்கேன் செய்து எங்கெல்லாம் அந்த புகைபடம் உள்ளதோ அதனை தடுக்கும் நோக்கில் இந்த தளம் செயல்படுகின்றது.மேலும், யாராவது அதைப் பதிவேற்ற முயற்சித்தால், அதனை இந்தத் தளங்கள் தடுக்கும். 


கூகுள், ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் உங்கள் அனுமதியின்றி பரவும் புகைப்படம், வீடியோவை  பரவினால் எப்படி நீக்குவது?


 https://stopncii.org/

அதில் Create Your Case என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்

அடுத்து உங்கள் வயது செலக்ட் செய்து கொள்ளுங்கல் அடுத்து வரும் கேள்வியில் உங்களுக்கு  பாதிப்பு என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்

அடுத்து அதில் உங்கள் பாதிப்பு என்ன என்பதை செலக் செய்து கொள்ளுங்கள்

அடுத்து எந்த புகைப்படம், எந்த வீடியோ என்பதை அப்லோடு செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்


உங்கள் அந்தரங்கப் படங்களைப் பகிர்ந்து கொள்வதாக யாராவது மிரட்டினால் என்ன செய்வீர்கள்? உடனே   https://stopncii.org/ இணையதளத்தில் புகார் அளித்து அந்த புகைபடங்கள் இனையத்தளத்தில் பரவாமல தடுக்கலாம்

 

 மேலும் விரிவாக தெரிந்து கொள்ள:-

https://www.youtube.com/watch?v=7Uakg3qtu-U

 

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback