Breaking News

இனி ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம்,குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கலைப் பெறலாம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0

ஆன்லைனில் மின்னணு வடிவில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவைகளின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



டிஜி லாக்கர் (digi locker) எனப்படும் செயலியை மத்திய அரசு உருவாக்கியது. இந்த ஆன்லைன் லாக்கரில், ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட் என அனைத்து ஆவணங்களையும் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். ஒருவேளை காகித வடிவில் இருக்கும் இந்த ஆவணங்கள் தொலைந்துபோனலோ, மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றாலோ டிஜி லாக்கரிலிருந்து டிஜிட்டல் வடிவிலான ஆவணங்களைக் காண்பிக்க முடியும்.

அந்த வகையில் மத்திய அரசின் டிஜி லாக்கர் செயலியைப் பயன்படுத்த அனைத்து துறைகளுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதன்மூலம் மக்கள் தங்களுடைய வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றின் மின்னணு நகல்களை இந்த டிஜிட்டல் லாக்கர் முறையின் மூலமாக பெறுவதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது இனி அனைத்து ஆவணங்களையும் மின்னணு முறையில் பெறலாம் என அரசு கூறியுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback