Breaking News

தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை சவுதி அரேபியா அறிவிப்பு...

அட்மின் மீடியா
0

தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை சவுதி அரேபியா அறிவிப்பு

 


இது தொடர்பாக சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், அடுத்த வெள்ளிக்கிழமை மசூதிகளில் தொழுகை நடைபெறும் போது, தப்லீக் ஜமாஅத் பற்றி மக்களை எச்சரிக்கும் வகையிலான பிரசங்கத்திற்கு நேரம் ஒதுக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

மேலும் நான்கு முக்கிய விசயங்களை பற்றி பேச வேண்டும் என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் முதலாவதாக இந்த குழுவின் தவறான வழிகாட்டுதல், விலகல் மற்றும் ஆபத்து பற்றிய அறிவிப்பு. மேலும் அவர்கள் வேறுவிதமாக கூறினாலும் அது பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்றாகும் என கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதாக தப்ளிக் மற்றும் தாவா குழுக்களின் மிக முக்கியமான தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

மூன்றாவதாக சமூகத்திற்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தை பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

நான்காவதாக சவுதி அரேபியாவில் தப்ளிக் மற்றும் தாவா குழு உள்ளிட்ட பாகுப்பாடான குழுக்களுடன் இணைந்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது என  அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு உலகெங்கும் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

 



 

சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் ட்விட்டர் பதிவு

 

https://twitter.com/Saudi_MoiaEN/status/1467846537418059776

 

Tags: அரசியல் மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback