Breaking News

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க கடன் முகாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க கடன் முகாம்  பற்றி  மாவ்ட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்


குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா (08.12.2021 முதல் 15.12.2021 வரை) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமானது மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்குக் கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.


இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் / சேவை பிரிவுகளுக்குப் புதிய தொழிற்சாலைகளை / சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியைப் பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. 


திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் (முகவரி-86, C& D-2வது பிரதான சாலை, அம்பத்தூர்தொழிற்பேட்டை, சென்னை-600 058) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் விழா (MSME) 08.12.2021 முதல் 15.12.2021 வரை நடைபெறுகிறது.


இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், 6% விழுக்காடு வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. 


தகுதிபெறும் தொழில்களுக்குத் தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.75 இலட்சம் வரை வழங்கப்படும். 


இந்த விழாக் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுக் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக்கட்டணத்தில் 50% விழுக்காடு சலுகை அளிக்கப்படும். NEEDS திட்டத்திற்கு ஆய்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினைப் புதிய தொழில் முனைவோர் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 

மேலும் தகவல்களுக்கு 044 26257664, 26248644 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சித் தலைவர், திருவள்ளூர்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback