Breaking News

8 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

8 ஆம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான பொதுத் தோ்வானது டிசம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 


தனித் தோ்வா்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. 

ஆனால், தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது

இந்நிலையில் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுபொதுத் தேர்வு டிசம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் வருகிற டிசம்பர் 14 முதல் தேர்வர்கள் தங்களது தேர்வுக்கான நுழைவுச் சீட்டை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Share this