அசுர வேகத்தில் பரவும் ஒமைக்ரான் பரவல்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 653 ஆக உயர்வு! மாநில பட்டியல்
தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றிய ஒமைக்ரான் இன்று உலகில் உள்ள பல நாடுகளில் அதிக வீரியத்தோடு பரவிவருகிறது. இவை இந்தியாவிலும் ஆரம்ப காலகட்டத்தில் மெல்லமெல்ல பரப்பியது. ஆனால் கடந்த சில நாட்களாக ஒமைக்ரான் வேகம் அதிகரித்து பரவுகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு 653 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 167 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் 165 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் 56 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் 55 பேருக்கும்,
குஜராத் மாநிலத்தில் 49 பேருக்கும்,
ராஜஸ்தான் மாநிலத்தில் 46 பேருக்கும்,
தமிழ்நாட்டில் 34 பேருக்கு,
கர்நாடக மாநிலத்தில் 31 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்