Breaking News

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி ரூ 50000 பெற யார் பெறலாம் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

 கொரோனாவல் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


முன்னதாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடதக்கது

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நிவாரணம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் மற்ற அனைவருக்கும் பொருந்தும்





Tags: தமிழக செய்திகள்

Share this