அமீரகத்தில் அறிமுகமான புதிய 50 திர்ஹம்ஸ் கரன்சி நோட்டு..!! புகைப்படம்..
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் புத்தம் புதிய 50 திர்ஹம்ஸ் கரன்சி நோட்டு இன்று பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிற எமிரேட்ஸின் ஆட்சியாளர்கள் மற்றும் பட்டத்து இளவரசர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டுள்ளனர்.
புதிய திர்ஹம்ஸ் சிறப்புகள்
அமீரகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய கரன்சி நோட்டினுடைய முன்புறத்தின் வலதுபுறத்தில் மறைந்த ஷேக் சயீத் அவர்களின் உருவப்படம் உள்ளது
அதேபோல் புதிய கரன்சி நோட்டின் நடுவில் அமீரக நாட்டின் நிறுவன தந்தைகளின் நினைவுப் படம் இடம்பெற்றுள்ளது
புதிய கரன்சி நோட்டின் இடதுபுறத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவிடமான வஹாத் அல் கராமாவின் புகைப்படம் உள்ளது
புதிய கரன்சி நோட்டின் பின்புறத்தில் மறைந்த ஷேக் சயீத் தொழிற்சங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் படம் உள்ளது
மேலும் எதிஹாத் அருங்காட்சியகத்தின் படமும் இடம் பெற்றுள்ளது.
மேலும் தியாகிகளின் நினைவிடமான வஹாத் அல் கராமாவின் புகைப்படமும் அமைந்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்