பஞ்சாப் நீதிமன்றத்தில் பயங்கர வெடிவிபத்து- 3 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குடும்பம் மற்றும் குற்றவியல் போன்ற வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நீதிமன்றத்தின் 3வது தளத்திலுள்ள கழிவறைக்குள் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டிருக்கிறது.இதையடுத்து அது குண்டுவெடிப்பு என தெரியவந்துள்ளது.
இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் சுமார் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்தக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நீதிமன்ற வளாகத்திற்குள் குண்டு வெடித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்