இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 21 ஆக உயர்வு
உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
இதில், கர்நாடகாவில் 2 பேர் , மகாராஷ்டிராவில் 8 பேர், குஜராத்தில் ஒருவர் மற்றும் டெல்லியில் ஒருவர் என 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 9 பேரில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் என்பதும் மீதமுள்ள 5 பேர் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, நாகவுர் மாவட்டம் ரோஷிசா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்