இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த 20 யூடியூப் சேனல்கள், மற்றும் 2 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர், இந்திய ராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ராமர் கோவில், ஜெனரல் பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் இணையத்தில் பொய் செய்திகளைப் பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ள அறிவிப்பில்:
இந்தியா தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்களைப் பற்றிய போலிச் செய்திகளை இவை பரப்புகின்றன.காஷ்மீர், இந்திய ராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ராமர் கோவில், ஜெனரல் பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் பிளவுபடுத்தும் உள்ளடக்கத்தை வெளியிட இந்த சேனல்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த சேனல்களின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 35 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இவற்றின் காணொலிகள் 55 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன.இவ்வாறு தெரிவித்துள்ளது.
முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
முழு அறிப்பையும் பார்க்க:
Tags: இந்திய செய்திகள்