ஒரே ஒரு ஹைக்கூ கவிதை 1 லட்சம் பரிசு அறிவிப்பு முழு விவரம்....
அட்மின் மீடியா
0
மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ரூ 1.லட்சம் பரிசுத் தொகையுடன் கவிதை போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் லிங்குசாமி.
கவிக்கோ அப்துல் ரகுமான் மீது தீவிர பற்றுகொண்ட திரைப்பட இயக்குநர் லிக்குசாமி. ஹைக்கூ கவிதை போட்டி ஒன்றை ஆர்.சிவக்குமாருடன் இணைந்து அறிவித்துள்ளார்.
இப்போட்டியில் வயது வித்தியாசமின்றி எவரும் கலந்துகொள்ளலாம். மூன்று வரிகள் மட்டும் கொண்ட, இரண்டு ஹைக்கூ கவிதைகள் மட்டுமே ஒருவர் அனுப்ப வேண்டும்.
கருப்போருள் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு நடுவர்களின் தீர்ப்பின்படி ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது என அறிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்