Breaking News

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு வீடியோ 13 பேர் பலி

அட்மின் மீடியா
0

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர்.


இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை உள்ளது. இந்த எரிமலை நேற்று முன்தினம்  திடீரென வெடித்துச் சிதறத் தொடங்கியது. இதனால் எரிமலை அருகே இருந்த வீடுகள் சேதமடைந்தன.உடனடியாக எரிமலை அருகே வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 

இதுவரை 13 பேர் உடல்களை மீட்டுப் பணியில் ஈடுபட்டவர்கள் மீட்டுள்ளனர். 100 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 41 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை சாம்பலுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளதால் இறந்துள்ளவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

மேலும் அந்த கிராமம் முழுவதும் எரிமலை சாம்பல் படிந்துள்ளது. சாலைகளிலும் கட்டடங்களிலும் வாகனங்களிலும் எரிமலை சாம்பல் படிந்து காணப்படும் நிலையில் அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

வீடியோ பார்க்க:-


https://twitter.com/joonirusal/status/1467122107398045697


https://twitter.com/Brave_spirit81/status/1467550248839041028



 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback