Breaking News

நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து அப்பாவி கிராம மக்கள் 13 பேர் சுட்டுக்கொலை

அட்மின் மீடியா
0

பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து அப்பாவி கிராம மக்கள் 13 பேர் சுட்டுக்கொலை

நாகாலாந்தில் மோன் மாவட்டம் ஒடிங் கிராமத்தில் நேற்று இரவு ஒரு வாகனத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் ஒடிங் கிராமத்தில் வேனில் பயங்கரவாதிகள் சிலர் செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் ஒடிங் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு  வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பாதுகாப்பு படையினர் அதில் பயங்கரவாதிகள்தான் இருப்பார்கள் என்று நினைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் மினி வேனில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் அலறியபடி சரிந்து விழுந்தனர். பாதுகாப்பு படையினர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்தனர்.

அப்போது பாதுகாப்பு படையினர் அந்த மினி வேனை ஆய்வு செய்தபோது அதில் வந்தவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதும், அப்பாவி கிராம மக்கள் என்பதும் தெரிந்தது. இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மினி வேனில் சென்றவர்கள்  அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள். அவர்கள் அனைவரும் வேலையை முடித்துவிட்டு ஊருக்கு வேனில் சென்றுள்ளனர்.

இதற்கிடையே அப்பாவி கிராம மக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற விவரம் அங்குள்ள கிராம மக்களுக்கு தெரிய வந்தது.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக நாகாலாந்தின் முதல்- மந்திரி தனது டுவிட்டர் பதிவில்

மோன் மாவட்டத்தில் உள்ள ஒடிங் கிராமத்தில் பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது. 

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

அப்பாவி கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர் மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. 

சட்டத்தின்படி நீதி வழங்கப்படும். அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.என அவர் கூறியுள்ளார்.


Share this