FACT CHECK பெண்கள் தனியாக ஆட்டோ, வாடகை காரில் செல்லும் போது GPS மூலம் போலீஸ் கண்காணிக்குமா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பெண்கள் தனியாக ஆட்டோ, வாடகை காரில் செல்லும் போது 9969777888 என்ற நம்பருக்கு போன் செய்தால், போலீசார் வாகனத்தை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பார்கள் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
கடந்த 2014 மார்ச் மாதம் மும்பை நகரில் சர்வதேச பெண்கள் தினம் அன்று அறிமுகம் செய்யபட்ட இந்த திட்டம் ஆனால், சரியான ஆதரவு இல்லாமல், அதிகம் பயன்படுத்தாமல் இருந்த காரணத்தால் 2017 மார்ச் மாதம் இந்த சேவை நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகின்றது
மேலும் இந்த தகவலை உண்மையா என ஒரு டுவிட்டர் பயனாளி நெல்லை டெபுடி கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவர்களிடம் 25.01.2021 அன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அர்ஜுன் சரவணன் அவர்கள் தனது டுவிட்டரில்
இது முழுக்க முழுக்க பொய யாரும் நம்பாதீங்க .தமிழ்நாடு காவல்துறையில் இப்படி எந்த திட்டமும் இல்லை. பாதுகாப்பிற்காக 'காவலன் SoS' செயலியை பயன்படுத்தவும் .'கண்ணால் காண்பதும் பொய்காதால் கேட்பதும் பொய்தீர விசாரிப்பதே மெய்' என தெரிவித்துள்ளார்
அதே போல் அந்த செய்தி தற்போதும் சிலரால் ஷேர் செய்யப்ப்ட்டு வருகின்றது இந்நிலையில் தமிழக காவல்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த செய்தி பொய்யானது என பதிவிட்டுள்ளார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.adminmedia.in/2021/01/fact-check-sms.html
Tags: FACT CHECK மறுப்பு செய்தி