Breaking News

FACT CHECK பெண்கள் தனியாக ஆட்டோ, டாக்ஸியில் ஏறும் போது காவல்துறைக்கு SMS அனுப்பனுமா? யாரும் நம்பாதீங்க! இந்த செய்தி பொய்யானது!!

அட்மின் மீடியா
0

 

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பெண்கள் தனியாக ஆட்டோ, டாக்ஸியில் ஏறும் முன்பு அந்த வாகனத்தின் பதிவு எண்ணை  9969777888 என்ற எண்ணிற்கு sms மூலம் அனுப்பி வைக்கவும்.    GPS மூலம் அந்த வாகனம்  ட்ராக் செய்ய காவல்துறைக்கு உதவும். என்று பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


கடந்த 2014 மார்ச் மாதம் மும்பை நகரில் சர்வதேச பெண்கள் தினம் அன்று அறிமுகம் செய்யபட்ட இந்த திட்டம் ஆனால், சரியான ஆதரவு இல்லாமல், அதிகம் பயன்படுத்தாமல் இருந்த காரணத்தால் 2017 மார்ச் மாதம் இந்த சேவை நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகின்றது

 மேலும் இந்த தகவலை உண்மையா என ஒரு டுவிட்டர் பயனாளி நெல்லை டெபுடி கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இதற்கு பதிலளித்துள்ள அர்ஜுன் சரவணன் அவர்கள் தனது டுவிட்டரில் 
 
இது முழுக்க முழுக்க பொய யாரும் நம்பாதீங்க .தமிழ்நாடு காவல்துறையில் இப்படி எந்த திட்டமும் இல்லை. பாதுகாப்பிற்காக 'காவலன் SoS' செயலியை பயன்படுத்தவும் .'கண்ணால் காண்பதும் பொய்காதால் கேட்பதும் பொய்தீர விசாரிப்பதே மெய்' என தெரிவித்துள்ளார்
 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

 

  அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.adminmedia.in/2019/09/9969777888.html

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback