மீண்டும் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது- வானிலை மையம்
வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது.குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என -வானிலை மையம்.அறிவித்துள்ளது
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் . இதனால் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கனமழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்