வாட்ஸ் அப் பயன்படுத்த இனி நெட் கனெக்ஷன் தேவையில்லை!!
உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருப்பது வாட்ஸ் அப் செயலி. அந்த வாட்ஸ் அப்பில் வாடிக்கையாளர்களின் வசதிகளுக்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் போனில் இண்டர்னெட் இல்லாமலேயே வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என்ற புதிய முறையை அப்டேட் செய்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டின் படி கணிணி அல்லது லேப்டாப்பில் நீங்கள் வாட்ஸ்அப் வெப்பில் ஒரு முறை இணைந்து விட்டாலே போதும். அதன்பிறகு உங்கள் போன் ஆன்லைனில் இல்லையென்றாலும் தகவல் பரிமாற்றத்தை தொடரலாம் என அறிவித்துள்ளது
இந்த வசதியை பெற உடனடியாக நீங்கள் பிளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸப் அப்டேட் செய்யுங்கள் ,அடுத்து கணிணி அல்லது லேப்டாப்பில் நீங்கள் வாட்ஸ்அப் வெப்பில் இணைந்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் உங்கள் போனில் இண்டர் நெட் இல்லை என்றாலும் நீங்கள் வாட்ஸப் பயன்படுத்தலாம்
.
Tags: தொழில்நுட்பம்