கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்- வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக கரையைக் கடந்து வருவதாக வானிலை மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கி விட்டதாக கூறினார்.
கடந்த 6 மணி நேரத்தில் 16 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், கனமழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சென்னைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்