Breaking News

இனி இந்த ரயில்களில் எல்லாம் முன்பதிவில்லாமல் பயணிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

இனி இந்த ரயில்களில் எல்லாம் முன்பதிவில்லாமல் பயணிக்கலாம்
 


நவம்பர் 25 ஆம் தேதி முதல் சில ரயில்களில் முன்பதிவில்லா 33 பொதுப்பெட்டிகள்  இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம்....

வண்டி எண்.(16729, 16730) மதுரை ஜங்சன் - புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(22609, 22610) மங்களூர் சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 6 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16605, 16606) மங்களூர் சென்ட்ரல் - நாகர்கோவில் ஏர்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 6 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12605, 12606) சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 3 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12635, 12636) சென்னை எழும்பூர் - மதுரை வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 3 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16191, 16192) தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 6  பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12679, 12680) சென்னை சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16791, 16792) திருநெல்வேலி ஜங்சன் - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும்  4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16649, 16650) மங்களூரு செண்ட்ரல் - நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 4 இரண்டாம் வகுப்பு சேர் கார் இருக்கை பெட்டிகள் மற்றும் 2  பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback