Breaking News

அம்மா உணவகங்களை போல் விரைவில் வருகிறது கலைஞர் உணவகங்கள்" - அமைச்சர் அறிவிப்பு!!

அட்மின் மீடியா
0

அம்மா உணவகங்களை போல் விரைவில் வருகிறது கலைஞர் உணவகங்கள்
    
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அம்மா உணவகம் என்ற சென்னை மாநகராட்சியின் திட்டமான மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டது . 

இந்த உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு இட்லி. சாம்பார் சாதம் 5 ரூபாய். தயிர் சாதம் மூன்று ரூபாய் என்று மலிவு விலையில் திறக்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அம்மா உணவகங்களை போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே 650 சமூக உணவகங்கள் அம்மா உணவகம் என்ற பெயரில் இயங்கி வரும் நிலையில் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தொடர்ந்து அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என முதல்வர் முக ஸ்டாலின்  தெரிவித்தது  குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback