உங்கள் பணத்தை 2 மடங்கு தருவதாக கூறி 'பவர் பேங்க் செயலி' மூலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க சி.பி.சி.ஐ.டி. அழைப்பு!
அட்மின் மீடியா
0
பணத்தைக் குறைந்த காலத்தில் 2 மடங்கு தருவதாக ஏமாற்றும் 'பவர் பேங்க் செயலி'- பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க சி.பி.சி.ஐ.டி. அழைப்பு!
பவர் பேங்க் முதலீடு செயலி மூலம் பணத்தை முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற விளம்பரங்களை நம்பி பலர் பவர் பேங்க் ஆப்பில் முதலீடு செய்து மோசடி கும்பலின் வலையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பிற்குள்ளான நூற்றுக்கணக்கானோர் பணத்தை இழந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் அளித்து வந்த நிலையில்,மேலும் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் புகார் அளிக்கவும், இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிவிக்கவும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை அணுக ஏதுவாக 9444128512 என்ற தொலைபேசி எண்ணையும், cbcyber@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், நேரில் சந்தித்து பேச ஏதுவாக காவல் ஆய்வாளர், சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவு, எண் 220, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற விசாரணை அதிகாரியின் முகவரியையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்
Tags: தமிழக செய்திகள்