21 ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்.. முழு விவரம்....
21 ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம். அக்டோபர் 19 ம் தேதி நிகழவிருக்கிறது.
சந்திர கிரகணம் என்றால் என்ன!!
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. அதாவது சூரியன், பூமி, சந்திரன் ஒரு நேர்கோட்டில் இருக்கும்
சிகப்பு நிறத்தில் சந்திரன்
முழுநிலவு, ஏற்படும் நாட்களில் மட்டுமே அதாவது பௌர்ணமி தினத்தில் மட்டுமே நிகழும். அந்த சமயத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் இருக்கும்.
முழுமையான நிலா மறைக்கப்படும் போது நிலவின் மீது விழும் சூரியனின் ஒளியைப் பூமி முற்றிலும் தடுக்கும். சூரிய வெளிச்சத்தின் மிகச் சிறிய அளவு பூமியின் வளிமண்டலம் வழியாக ஒளிவிலகல் அடைந்து நிலவின் மீது படும். இதனால் ராலே ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு சிவப்பு நிறத்தில் ஒளிரும்.
எப்போது சந்திரகிரகணம்!!
இந்த இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் நவம்பர் 19ஆம் தேதி நிகழவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்திய நேரப்படி பகல் 1.30க்கு இந்த கிரகணத்தின் உச்சம் ஏற்பட உள்ளது. அப்போது, சந்திரனின் 97 சதவீத பகுதியை பூமி மறைக்கும். இதனால், சந்திரன் சிகப்பு நிறத்தில் காணப்படும்.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இந்த கிரகணம் 3 மணி நேரம், 28 நிமிடங்கள் நீடிக்கும் என்று கணித்துள்ளது
2001ம் ஆண்டு முதல் 2100ம் ஆண்டு வரையிலான நூற்றாண்டில், இதை விட வேறு எந்த சந்திர கிரகணமும் இவ்வளவு நீண்ட நேரத்துக்கு இருக்காது எனவு தெரிவித்துள்ளது
சந்திர கிரகணம் - இந்தியாவில் தெரியுமா?
வட அமெரிக்க நாடுகளில் இதை தெளிவாக காணலாம். மேலும் , தென் அமெரிக்க நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள், பசிபிக் பிராந்தியம், ஆஸ்திரேலிய நாடுகளிலும் காணலாம்,’ என நாசா தெரிவித்துள்ளது.
ஆசியப் பகுதிகளில் பகல் நேரம் இருக்கும் என்பதால் அந்த நாடுகளில் வசிப்போருக்குச் சந்திர கிரகணம் தெரியாது. இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளில் இந்த சந்திர கிரணம் தெரியாது என்றாலும் கூட
இந்த நிகழ்வை நாசா உள்ளிட்ட பலரும் நேரடியாக இனையத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் உலகெங்கும் உள்ளவர்களும் பார்க்கலாம்
Tags: தமிழக செய்திகள்