Breaking News

13 ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!! வானிலை ஆய்வுமையம்

அட்மின் மீடியா
0

13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் தமிழகத்திற்கு இன்றும் நாளையும்ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையில் இருந்து 850 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைக்கொண்டுள்ளது. இது வடமேற்கில் நகர்ந்து நாளை சென்னை, கடலூர் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 13-ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து, மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் அதன் பிறகே, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறுமா ? அல்லது புயலாக மாறுமா என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.


Tags: தமிழக செய்திகள்

Share this