Breaking News

FACT CHECK ஊது பாவை தாவரம் என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அழிவின் விளிம்பில் இருக்கும் ஊது பாவை வகையைச் சேர்ந்த மூலிகை இது இனவிருத்திக்காக தன் மகரந்தத்தை இப்படி ஊதித் தள்ளி கொண்டே இருக்கும். அடர்ந்த மழைப்பொழிவு காடுகளில் மட்டுமே வளரக்கூடிய இந்த மூலிகைகள் இயற்கை தந்த பேரதிசயம் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளது போல் இந்த உலகில் எந்த ஒரு தாவரமும் இல்லை, மேலும் நாம் தேடிய வரையில் ஊதுபாவை என்ற பெயரில் எந்தவித தாவரமும் இல்லை என்றே சொல்லலாம்

அப்படியானல் அந்த வீடியோ என்ன பொய்யா என்றால் ஆம் அது ஒரு கிராபிக்ஸ் செய்யபட்டவீடியோ ஆகும்

லண்டன் நாட்டை சேர்ந்த Luke Penry என்பவர் தனது கலைதிறனையும் தனது கணினிதிறனையும் கொண்டு அது போல் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளார்

மேலும் அவரது இன்ஸ்டாகிராமில் அதுபோல் பல வீடியோக்கள் தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளார்

ஆனால் பலரும் உண்மை என்னஎன்று தெரியாமல் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback