Breaking News

வயதானவர்கள், மாற்றுதிறனாளிகள், ரேசன் கடைக்கு நேரில் போகாமல் பொருட்கள் வாங்க அங்கிகார சான்று வாங்குவது எப்படி....

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் தற்போது பயோமெட்ரிக் முறையில் தான் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை இணைத்து உள்ளவர்கள் மட்டுமே பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை வைத்து பொருட்கள் வாங்க முடியும். 



இந்நிலையில் பலரது கைவிரல் ரேகை பதிவாகவில்லை என்று சமீப காலமாக புகார்கள் எழுந்து வருகிறது.வயதனாவர்களுக்கு கைவிரல் ரேகைகளில் தேய்வு மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதால் அவர்களின் கைரேகை பதிவாவதில்லை. அதனால் அவர்கள் ஆதார் சேவை மையத்திற்கு சென்று பயோமெட்ரிக்கை அப்டேட் செய்வது அவசியம் ஆகும். 

மேலும் ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாத நிலையில் உள்ள வயதானவர்கள் அவர்களுக்கு பதிலாக குடும்ப உறுப்பினர் வேறு ஒருவரை நியமிக்கலாம்.

இதற்கு முதலில் tnpds.com என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் உள்ள அங்கீகார சான்று என்ற ஆப்ஷனை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதில் .குடும்ப தலைவரின் பெயர் மற்றும் அட்டை எண், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

அடுத்து ரேஷன் கடைக்கு எதனால் நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாது என்ற காரணத்தை அந்த விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்ட வேண்டும்.

அடுத்ததாக உங்களுக்கு பதில் யார் சென்று பொருட்கள் வாங்க உள்ளார்கள், அவர் பெயர், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி உங்கள் ரேஷன் கடைக்கான தாலுகா அலுவலகத்தில் இந்த விண்ணப்பத்தை கொடுத்தால் அவர்கள் அதனை சரிபார்த்து உங்களுக்கு அனுமதி வழங்கி சான்றிதழ் வழங்குவார்கள். இதை வைத்து கொண்டு நீங்கள் ரேஷன் கடைக்கு நேரில் போகமல் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.

அங்கீகார சான்று படிவத்தை டவுன்லோடு செய்ய

https://www.tnpds.gov.in/downloads/authorization-form.pdf

Tags: தமிழக செய்திகள்

Share this