BREAKING: ரேஷன் கடையில் மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு
அட்மின் மீடியா
0
மக்களை அலைக்கழிக்கும் ரேஷன் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை.
சில இடங்களில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அழைக்கப்படுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக, கைரேகை பதிவில் முதியவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக வெகுவாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.கைரேகை பதியாத முதியோர்களுக்கு பதிலாக குடும்பத்தை சேர்ந்த யாராவது ஒருவர் ரேகை வைத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்கவரும் குடும்ப அட்டைதார்களை அலைக்கழிக்கும் ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.