BREAKING : உள்ளாட்சி தேர்தலை நடத்த 6 மாதம் அவகாசம் தேவை மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
கடந்த ஆட்சியில் தமிழகத்தில் புதியதாக உருவாக்கபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாடாமல் இருக்கும் 9 புதிய மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப். 15-ம் தேதிக்குள் நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 22.06.2021 அன்று உத்தரவிட்டது
அதன்பிறகு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு வரையறை மற்றும் இறுதிவாக்காளர் பட்டியல் என தேர்தல் வேலைகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதமாக செய்து வந்தது, சமீபத்தில் வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
மேலும் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று கடந்த 2 தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்
இந்நிலையில் தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே இரு முறை காலாவகாசம் அவகாசம் கோரியிருந்த நிலையில் தற்போது 3வது முறையாக கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்