Breaking News

என் தம்பி, தங்கைகளுக்கு நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ

அட்மின் மீடியா
0

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்றும் எதற்கும் தற்கொலை தீர்வல்ல என்பதையும் நடிகர் சூர்யா தன்னபிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. மாணவர்கள் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு கடந்த மாதம் இருந்த வேதனை, கவலை இந்த மாதம் இருக்கிறதா? யோசித்து பாருங்கள். நிச்சயம் குறைந்திருக்கும். அல்லது தீர்ந்திருக்கும்.பரீட்சை உங்க உயிரோட பெரிது இல்லை. உங்க மனதுக்கு கடினமாக இருந்தால், உங்களுக்கு பிடித்தவர்கள், அப்பா, அம்மா, நண்பர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் என யாரிடமாவது மனதுவிட்டு பேசிவிடுங்கள். 

பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாமே சிறிது நேரத்தில் மறைந்துவிடக்கூடியவை.தற்கொலை, வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பதெல்லாம் உங்களை விரும்புபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. 

நான் எல்லா பரீட்சையிலும் தோல்வியடைந்து, குறைவான மதிப்பெண்களை பெற்றிருக்கிறேன். மதிப்பெண், தேர்வு மட்டும் வாழ்க்கையில்லை. சாதிக்க அத்தனை விஷயங்கள் இருக்கிறது. உங்களை புரிந்துகொள்ள நேசிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். 

நம்பிக்கை தைரியத்துடன்  இருந்தால் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்'' அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று அவர் கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க:

https://twitter.com/Suriya_offl/status/1439146076087357442

Tags: தமிழக செய்திகள்

Share this