டெலகிராமில் லைவ் வீடியோ சேட் செய்யலாம் சூப்பர் அறிவிப்பு
இனி டெலகிராமில் லைவ் சேட் செய்யலாம் சூப்பர் அறிவிப்பு
டெலகிராம் தன் பயனர்களுக்கு புதிய அப்டேட் அறிவித்துள்ளது கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகம் ஆன டெலகிராம் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கிற்க்கு போட்டியாக உள்ளது
மேலும் டெலிகிராம் ஆப் கடந்த வாரம் உலகளவில் ஒரு பில்லியன் மக்கள் டவுன்லோடு செய்து பயன்படுத்துகின்றார்கள் என சென்சார் டவரில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
இதுவரை ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு வசதி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது டெலிகிராமிலும் நீங்கள் லைவ் சேட் செய்யலாம் என அறிவித்துள்ளது
இந்த புதிய வசதி மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் இணைந்து கொள்ள முடியும். மேலும் நேரடி ஒளிபரப்பில் பேச விரும்புபவர்கள் ரைஸ் என்னும் வசதியை பயன்படுத்தி பேசலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய வசதி கூடிய விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தொழில்நுட்பம்