Breaking News

உங்கள் ஊரில் யார் யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்? மொபைலில் பார்ப்பது எப்படி

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட  9 மாவட்டங்களில்  உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது.

அக்.6 ம் தேதி மற்றும் அக்.9 ம் தேதி இரண்டு கட்டமாக 9 மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். 

இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

உங்கள் பகுதியில் யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?

தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் தினமும் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பார்க்கலாம்.

உங்கள் பகுதியில் யார் வேட்பாளர் என அறிய 

https://tnsec.tn.nic.in/nomination_view_2021/


அதில் உங்கள் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி ஊராட்சி ஒன்றியம்,ஊராட்சி தலைவர் , வார்டு உறுப்பினர் என று இருக்கும் அதில் உங்கள் தேவையை கிளிக் செய்து உங்கள் தாலுக்கா செலக்ட் செய்து அதில் உங்கல் ஊராட்சியை செலக்ட் செய்து அதில் உங்கல் வார்டை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்

வேட்புமனுத்தாக்கல்:-

செப்டம்பர் 15ம் தேதி முதல் 

 

வேட்புமனுத்தாக்கல்முடிவு:-

செப்டம்பர் 20ம் தேதி

 

வேட்புமனு பரிசீலனை:-

செப்டம்பர் 23 தேதி

 

வேட்புமனு திரும்ப பெறுதல்:-

  செப்டம்பர் 25 தேதி

 

தேர்தல் நாள்:-

அக்.6 ம் தேதி முதல் கட்டம்

மற்றும் 

அக்.9 ம் தேதி இரண்டாம் கட்டம்


வாக்கு எண்ணிக்கை நாள்:-

அக்டோபர் 12ஆம் தேதி

 

 இந்த 9 மாவட்டங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் வாக்குசீட்டு முறையில் நடைபெறும் எனவும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்

அதேபோல் 9 மாவட்டங்களுக்கு தனித்தனி ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்

வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்; வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்தெரிவித்துள்ளார்



Tags: அரசியல் தமிழக செய்திகள்

Give Us Your Feedback