Breaking News

உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு அதிமுக வழக்கு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது.



தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை  இரண்டு கட்டங்களாக அக்.6, மற்றும் அக். 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. 

அந்த மனுவில்; 

தமிழகம் முழுவதும் இல்லாமல் 9 மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுகின்றது. மேலும் சட்டப்பேரவைத் தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த என்ன காரணம் இதனால் கள்ள ஓட்டுப் போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாகப் போய்விடும்.என  மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback