கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து 12 வயது சிறுவன் பலி!
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸுக்கு பலியாகியுள்ளான்.நிபா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இறந்தார்.
மேலும் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்தது. மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக மத்திய அரசு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (NCDC) குழுவை மாநிலத்திற்கு உடனடியாக அனுப்பியுள்ளது.
கடந்த சில வருடங்கள் முன்னதாக கேரளாவில் பரவிய நிபா வைரஸ் பல உயிர்களை பலி கொண்டது குறிப்பிடத்தக்கது
Tags: இந்திய செய்திகள்