FACT CHECK,: இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் வருது என பரவும் செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இன்று இரவு செல்போன்கள் பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை. உலக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை. இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதனால் இன்றிரவு 12.30 தொடக்கம் 3.30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள். போன்களை உங்கள் உடம்புக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். அவை பயங்கரமான சேதத்தை உண்டுபண்ணும் எனவும், ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அந்த நேரத்தில் கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் “NASA” செய்தி அறிவித்துள்ளது.
என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
2017 ம் ஆண்டே இந்த பொய் செய்தி பரவியது அப்போதே அட்மின் மீடியா இந்த செய்தியினை பொய் என சொல்லி மறுப்பு செய்தி வெளியிட்டுஇருந்தோம்
அதே பொய்யான அந்த வதந்தி செய்தி மீண்டும் தற்போது பரவிவருகின்றது
நாசா அது போல் எந்த அறிவிப்பும் அறிவிக்கவில்லை
எனவே யாரும் அந்த செய்தியினை நம்பாதீர்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி