FACT CHECK: இந்தோனேசியாவில் 2 மணி நேரத்தில் கொரானாவினை குணப்படுத்தும் இளநீரில் உப்பு, தேன்,எழுமிச்சை மருந்து? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இந்தோனேசியா நாட்டில் இப்போது கொரோனாவை 2 மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்துவத்தை கண்டுபிடுத்துள்ளனர். ஒரு இளநீரில் ஒரு டீ ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடிக்கின்றனர். குடித்த 2 மணி நேரத்திற்கு பிறகு கொரோனாவிலிருந்து குணமடைகிறார்கள். இதை ஒரு முறை மட்டுமே குடித்து விட்டு 3 நாட்களுக்கு பிறகு கோவிட் சோதனைக்குச் சென்றால் அவர்களுக்கு முடிவுகள் நெகட்டிவ்வாக இருக்கின்றன. இதை அனைவரும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முயற்சி செய்கிறார்கள். இந்தோனேசியாவில் இப்போது மிகவும் பிரபலமாக உள்ள இந்த மருத்துவம் மலேசியா வரை பரவியுள்ளது என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
நாம் இது குறித்து தேடுகையில் இது போன்று இளநீரில் உப்பு, தேன், எலுமிச்சைச்சாறு கலந்து குடிப்பதால் கொரோனா 2 மணி நேரத்தில் குணமாகிறது என இந்தோனேசிய அரசாங்கமோ, மருத்துவர்களோ கூறவில்லை என்பதே உண்மை
மேலும் உலக சுகாதர மையமும் இந்த முறையை அறிவிக்கவில்லை கொரானா என்னும் கொடிய நோயால் பல நாட்டு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் போராடி கொண்டு இருக்கும் வேளையில் இது போல் பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள்
மேலும் இந்தோனேசியாவில் உள்ள கட்ஜ மாடா பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியர் ஜூலிஸ் இகவாதி என்பவர் அந்த தகவல் ஆதாரமற்றது பொய்யானது யாரும் நம்பவேண்டாம், எனக் கூறியதாக கடந்த ஜூன் மாதம் AFP உண்மை கண்டறியும் குழு இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://factcheck.afp.com/false-claim-coconut-water-concoction-can-cure-covid-19-circulates-online
Tags: FACT CHECK மறுப்பு செய்தி