Breaking News

ராஜ்யசபா தேர்தல் - திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 ராஜ்யசபா தேர்தல் - திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிப்பு

 
தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ.முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
இந்தத் தேர்தல், செப்டம்பர் 13ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
 
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, திமுக வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவின் இணைச் செயலாளராக உள்ளார்.
 
திமுக நாடாளுமன்றத்தில் போதிய பலத்தோடு உள்ளதால், எம்.எம்.அப்துல்லா எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 



Tags: தமிழக செய்திகள்

Share this