Breaking News

சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 



சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து தங்கி இருக்கும் வாடகைத்தார்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். 

வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையங்களில், வாடகைதாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும்.

அந்தந்த பகுதி துணை ஆணையர்கள் அலுவலகங்களிலும், ஆணையர் அலுவலகத்தில் உளவுப்பிரிவு அல்லது குற்ற ஆவண காப்பகத்திலும் இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள்.

வெளிமாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டியது அவசியம்  என்று காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback