கோயம்புத்தூர் மாவட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் என்ன என்ன முழு விவரம்
அட்மின் மீடியா
0
கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி முதல்கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கட்டுபாடுகள் என்ன:-
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகை கடைகள் மற்றும் துணிகடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை
அனைத்து பூங்காக்கள் மற்றும் மால்கள் ஆகியவை சனி, ஞாயிறு அகிய இரு தினங்கள் செயல்பட தடை
அனைத்து உணவகம் மற்றும் பேக்கரிகள் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கவும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி
அனைத்து வார சந்தைகளும் இயங்க தடை
அத்தியாவசிய கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கண்டிப்பாக ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டிருப்பதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்
கேரள மாநிலத்திலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவியர்கள் தினசரி வந்து செல்ல அனுமதியில்லை
விநாயகர் சதுர்த்தி : பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை
கோவை நகரில் கிராஸ்கட் சாலை , 100 அடி சாலை , ஒப்பணக்கார வீதி , ராமமூர்த்தி சாலை , சாரமேடு சாலை,ரைஸ் மில் சாலை , என்.பி.இட்டேரி சாலை , சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை ( திருச்சி ரோடு ) , ஹோப் காலேஜ் சிக்னல் கடைகள், காளப்பட்டி ரோடு ( நேரு நகர் ) , டி.பி.ரோடு , திருவேங்கடசாமி ரோடு , என்.எஸ்.ஆர்.ரோடு , ஆரோக்கிய சாமி ரோடு , சரவணம்பட்டி சந்திப்பு , கணபதி பேருந்து நிலைய சந்திப்பு , துடியலூர் சந்திப்பு மார்கெட் கடைகள் , பீளமேடு ரொட்டி கடை மைதான கடைகள் , காந்திமாநகர் சந்திப்பு , ஆவாரம்பாளையம் சந்திப்பு , கணபதி பாரதி நகர் , பாப்பநாயக்கன்பாளையம் சந்திப்பு , ராஜ வீதி , பெரிய கடை வீதி , வெரைட்டி ஹால் வீதி , என்.எச.ரோடு , இடையர் வீதி , வைசியாள் வீதி , தாமஸ் வீதி , சுக்கிரவாரபேட்டை வீதி , மரக்கடை வீதி , ரங்கே கவுண்டர் வீதி , காந்திபுரம் முதல் வீதி முதல் 11 வது வீதி வரை உள்ள தெருக்கள் , மற்றும் சல்லிவன் வீதி ஆகிய 44 பகுதிகளில் உள்ள தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அந்த தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால் , மருந்தகம் , காய்கறி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்