ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கியது மத்திய அரசு.
அட்மின் மீடியா
0
ஜான்சன் & ஜான்சன் ஒரே ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் அதன் தடுப்பூசியை தயாரித்துள்ளது
இந்த நிலையில், இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கியது மத்திய அரசு.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பயாலாஜிக்கல்-இ லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்து உள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே, கோவிஷீல்டு ,கோவாக்சின் ஸ்புட்னிக் - வி உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி ஏற்கனவே, அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள்