Breaking News

நடிகர் விஜயை தொடர்ந்து தனுஷை கண்டித்த நீதிமன்றம் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷூக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

அட்மின் மீடியா
0

கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு 60.66 லட்சம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டிருந்தது. நுழைவு வரி வசூலிக்க தடை கோரி தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 



இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாண்புமிகு  நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்கள்

நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள்; ஆனால், செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள் பால்காரர் உள்ளிட்ட ஏழைகள் கூட பெட்ரோலுக்கு வரி செலுத்தும்போது, அதனை செலுத்த முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா? என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணையை இன்று மதியம் ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

அதன்படி, மதியம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நுழைவு வரியில் 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 லட்ச ரூபாய் தனுஷ் செலுத்த வேண்டிய பாக்கி என, வணிக வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையத்து, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குகள் குவிந்துள்ள நிலையில், இதுபோன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமைதான். வழக்கை வாபஸ் பெறும் தனுஷ் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மீதத்தொகை ரூ.30,30,757-ஐ 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

முன்னதாக, இதே போல் வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்ட நடிகர் விஜய்யை விமர்சித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தார். இதுதொடர்பான விஜய்யின் மேல்முறையீட்டை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback